மிருணாள் தாகூரின் 'டகோயிட்' - ரிலீஸ் தேதி அறிவிப்பு

இப்படத்தின் மூலம் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் தெலுங்கில் அறிமுகமாகிறார்.;

Update:2025-05-26 13:15 IST

சென்னை,

'சீதா ராமம்', 'ஹாய் நானா', 'பேமிலி ஸ்டார்' போன்ற தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மிருணாள் தாகூர். இவர், தற்போது 'டகோயிட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதிவி சேஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை ஷானியல் டியோ இயக்குகிறார். சுப்ரியா யர்லகடா மற்றும் சுனில் நரங் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் இவர் தெலுங்கில் அறிமுகமாகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. அதனுடன், இப்படம் வருகிற டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்