ஐக்கிய அரபு அமீரகத்தில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த 'ஜன நாயகன்’ டிரெய்லர்
ஜன நாயகன் திரைப்படம் வரும் 9ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.;
துபாய்,
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்-யின் கடைசி திரைப்படம் ஜன நாயகன். இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார்.
ஜன நாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கவுதவ் மேனன், மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ், பிரியாமணி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள ஜன நாயகன் திரைப்படம் வரும் 9ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. யூடியூப் தளத்தில் இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு பின்னர் பல்வேறு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜன நாயகன் திரைப்படத்தின் டிரெய்லர் சமூகவலைதள டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது. அதன்படி, ஜன நாயகன் டிரெய்லர் வெளியான 20 மணி நேரத்தில் சுமார் 3 கோடி முறை பார்வையிடப்பட்டு ஐக்கிய அமீரகத்தின் டிரெண்டிங் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது.
ஐக்கிய அமீரகத்தில் வசித்து வரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்கள ரசிகர்கள் உள்பட அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ள ஜன நாயகன் டிரெய்லர் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது.