"பராசக்தி" படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு
"பராசக்தி" படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.;
சென்னை,
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார்.
இந்தி மொழித் திணிப்பின்போது தமிழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் எழுச்சியைப் பேசும் படமாக ‘பராசக்தி’ திரைக்கு வந்துள்ளது. சென்சாரில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் மாற்றம் செய்யப்பட்டு வெளியான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பராசக்தி படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'டான் பிக்சஸ்' படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்டுள்ளது. அந்த காட்சியில் செழியன் மற்றும் சின்னதுரை இருவரும் இந்தியில் பேசிக்கொள்ளும் காட்சியும், இருவரும் விளையாட்டுத்தனமாக சண்டை போடும் காட்சியும் இடம்பெற்றுள்ளன.