சிம்புவுடன் கூட்டணி அமைக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்!

நடிகர் சிம்பு தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.;

Update:2026-01-22 11:55 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். வடசென்னை கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்ட கேங்ஸ்டர் படமாக இந்த படம் தயாராகி வருகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில், சிம்பு இரு வேறு தோற்றங்களில் நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, ‘டிராகன்’ படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நடிகர் சிலம்பரசன் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்