“ரெட் லேபிள்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அஸ்மின் நடித்துள்ள ‘ரெட் லேபிள்’ படத்தினை கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார்.;

Update:2026-01-22 11:02 IST

கே.ஆர்.வினோத் இயக்கத்தில் ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ள படம் ‘ரெட் லேபிள்’. கதாநாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் நடித்துள்ள இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார், முனிஷ்காந்த் நடித்துள்ளனர்.

கோவை பின்னணியில் ஒரு கல்லூரியில் நடக்கும் கொலையும் கொலை சார்ந்த சம்பவங்களும் கொண்ட மர்மமான கதையைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இப்படம். படப்பிடிப்பு முழுக்க முழுக்க கோவை நகரில் எடுக்கப்பட்டுள்ளது. ரெட் என்பது புரட்சியையும், லேபிள் என்பது அடையாளத்தையும் குறிக்கும். அந்தவகையில் தனது அடையாளத்தை தேடும் பல மனிதர்களின் கதையாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ரெட் லேபிள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ந் தேதி வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்