தர்மேந்திரா மறைவு ஈடுசெய்ய முடியாத வெற்றிடம்.. கணவர் குறித்து ஹேமமாலினி உருக்கம்

நடிகை ஹேமமாலினி சமூக வலைதளத்தில் உணர்ச்சிபூர்வமாக அஞ்சலி செலுத்தி பதிவு வெளியிட்டு உள்ளார்.;

Update:2025-11-28 03:15 IST

மும்பை,

இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா தனது 89-வது வயதில் கடந்த 24-ந் தேதி மரணம் அடைந்தார். தர்மேந்திரா மறைவுக்கு பிறகு அவரது மனைவியும் பா.ஜனதா எம்.பி.யுமான நடிகை ஹேமமாலினி (வயது 77) சமூக வலைதளத்தில் உணர்ச்சிபூர்வமாக அஞ்சலி செலுத்தி பதிவு வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தர்மேந்திரா தான் எனக்கு எல்லாம். ஒரு துணை, வழிகாட்டி, நண்பர், அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை எனக்கு விட்டு சென்றது. எனது தனிப்பட்ட இந்த இழப்பு விவரிக்க முடியாதது. இது என் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். பல வருடங்களாக ஒன்றாக இருந்த பிறகு, பல சிறப்பு தருணங்களை மீண்டும் அனுபவிக்க எண்ணற்ற நினைவுகள் என்னிடம் உள்ளன. தர்மேந்திரா எனக்கு அன்பான கணவர், 2 பெண் குழந்தைகளின் அன்பான தந்தை, தத்துவஞானி, கவிஞர், தேவைப்படும் எல்லா நேரங்களிலும் அவர் எனக்கு எல்லாமுமாக இருந்தார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்