“சிறை” படத்தை பாராட்டிய தினேஷ் கார்த்திக்

விக்ரம் பிரபுவின் ‘சிறை’ படம் கடந்த 23ந் தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.;

Update:2026-01-25 15:27 IST

சென்னை.

சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த ‘சிறை’ படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இயக்குநர் தமிழ், தான் சந்தித்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘சிறை’ என்ற பெயரில் எழுதிய கதையே திரைப்படமாக திரையரங்குகளில் வெளியானது. இப்படம் சிறைக் கைதியின் காதல் கதையாகவும் இஸ்லாமியர்கள் மீதான குற்றப்பார்வை குறித்தும் அழுத்தமாக பேசியது. சாதாரண காதல் கதையைக் கிளைமேக்ஸில் பரபரப்பாகச் சொல்லி ரசிகர்களை இருக்கை நுனிக்கு அழைத்து சென்று வெற்றியும் பெற்றனர்.

இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுடன் அறிமுகமாகும் எல்.கே.அக்ஷய் குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நாயகியாக அனந்தா நடித்திருக்கிறார்.‘சிறை’ திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது. ‘சிறை’ படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலையும் குவித்தது. இப்படம் 25 நாட்களை கடந்து வெற்றி பெற்றுள்ளது. இப்படம் கடந்த 23ந் தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி, அங்கும் தன் முத்திரையைப் பதித்து வருகிறது. ‘சிறை’ படம் உலகளவில் ரூ. 32 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வந்தனர்.

இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ‘சிறை’ படத்தை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக தினேஷ் கார்த்திக் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று சிறை படம் பார்த்தேன். அருமையான படம். யதார்த்தமான மற்றும் நம் மனதுக்கு நெருக்கமான, நெஞ்சைத் தொடும் ஒரு காதல் கதை. விக்ரம் பிரபு மற்றும் அவருடன் நடித்த நடிகர்களின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது” என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்