சின்னத்திரை நடிகைக்கு ஆபாச வீடியோ அனுப்பிய இயக்குனர்

சின்னத்திரை நடிகை சிலங்காவுக்கு ஆபாச வீடியோக்களையும், இணைப்புகளையும் இயக்குனர் ஒருவர் அனுப்பியுள்ளார்.;

Update:2025-07-17 12:51 IST

மலையாள திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் சிலங்கா. சின்னத் திரை தொடர்களிலும் நடித்து வரும் சிலங்கா டைரக்டர்களிடம் இருந்து தனக்கு நடந்த மோசமான நடத்தை குறித்து அவர் கூறுகையில், நான் ஒரு தொடரின் முன்னோட்டத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். படப்பிடிப்புக்காக ஒரு நாள் காலை வந்த போது இயக்குனர் முக்கியத்துவம் இல்லாத கேரக்டரை வழங்கினார். என்ன நடக்கிறது என புரியவில்லை.

படப்பிடிப்பின் போது முரட்டுத்தனமான கருத்துக்களை தெரிவிப்பார். தகாத முறையில் என்னை தொடுவார். மேலும் ஒரு நாள் இரவு எனக்கு ஆபாச வீடியோக்களையும், இணைப்புகளையும் அனுப்பினார். நான் அதிர்ச்சி அடைந்து அவரை கண்டித்தேன்.

அதில் இருந்து மனரீதியாக தாங்க முடியாத சித்ரவதை எனக்கு நடந்தது. என்னை பொதுவெளியில் அவமதிப்பது மட்டுமின்றி என் குடும்பத்தை பற்றியும் மோசமாக பேசினார். சிறிது காலம் பொறுத்துக் கொண்டு இருந்த நான் அவர் எல்லை மீறிக் கொண்டே போனதால் 60 வயதான அந்த இயக்குனரை தாக்கினேன்.  இவ்வாறு அவர் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்