நடிகை ரம்யாவிடம் நலம் விசாரித்த டி.கே.சிவக்குமார்

கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நடிகை ரம்யாவின் தலையில் கைவைத்து ஆசிவழங்கினார்.;

Update:2025-08-19 06:42 IST

பெங்களூரு,

ஹெப்பால் பாலத்தை முதல்-மந்திரி சித்தராமையா நேற்று திறந்துவைத்தார். இந்த விழாவில் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா கலந்துகொண்டார். அவரை பார்த்ததும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், ஹலோ... என்னம்மா எப்படி இருக்கிறீங்க... என கேட்டார். அதற்கு நான் நலம் சார் என நடிகை ரம்யா கூறினார்.

அதையடுத்து இருவரும் கட்டியணைத்து ஆரத்தழுவினர். அந்த சமயத்தில் டி.கே.சிவக்குமார் தனது கழுத்தில் அணிந்திருந்த கருப்பு நிற துண்டு மடிந்து கிடந்தது. அதனை கையால் எடுத்து கீழே விட்டார். அந்த துண்டு சரியாக கீழே விழவில்லை. அதனை நடிகை ரம்யா சரி செய்துவிட்டார். இதையடுத்து ரம்யாவின் தலையில் கைவைத்து ஆசிவழங்கிவிட்டு டி.கே.சிவக்குமார் சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்