என் இளமைக்கு என்ன காரணம் தெரியுமா? - மலைக்கா அரோரா பதில்

மலைக்கா அரோரா தன்னைவிட 12 வயது குறைந்த அர்ஜுன் கபூருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார்.;

Update:2026-01-14 17:51 IST

,

பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் மலைக்கா அரோரா. 52 வயதான மலைக்கா அரோரா சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் தனது தோற்றத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதுமட்டுமின்றி உடல்கட்டுகோப்பு விஷயங்களில் தீவிர ஆர்வம் கொண்ட மலைக்கா அரோரா உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு பலருக்கு உத்வேகமாக இருக்கிறார்.

இந்தநிலையில், சினிமாவில் தனிபாடலுக்கு மலைக்கா அரோரா கவர்ச்சி நடனம் ஆடுவது குறித்து, உங்கள் இளமைக்கு காரணம் என்ன என்று சமூக வலைதளங்களில் டிரோல்கள் எழுந்து வருகிறது.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,

52 வயதில் நான் நடனம் ஆடுவதை பாக்கியமாக உணர்கிறேன். நடனம் என்பது உண்மையாக ரசிக்கப்பட வேண்டிய ஒரு வெளிப்பாடு. அர்ஜூன் கபூர் எனக்கு முக்கியமானவர். என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக அவர் இருபப்வர் என நான் நினைக்கிறேன். கடந்த காலத்தை பற்றியோ நான் அதிகம் பேச விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அர்பாஸ்கானுடன் ஏற்பட்ட விவகாரத்துக்கு பிறகு மலைக்கா அரோரா தன்னைவிட 12 வயது குறைந்த அர்ஜுன் கபூருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்