சினிமாவில் மட்டுமல்ல, தற்காப்பு கலைகளிலும் சிறந்து விளங்கும் நடிகை - யார் தெரியுமா?
இவர் தனது நடிப்பால் பார்வையாளர்களை ஈர்ப்பது மட்டுமில்லாமல், தற்காப்பு கலைகளிலும் திறமையைக் காட்டி இருக்கிறார்.;
சென்னை,
சினிமா பிரபலங்கள் நடிப்பில் மட்டுமல்ல. மற்ற துறைகளிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்துகிறார்கள்.. சிலர் விளையாட்டிலும், சிலர் ஓவியத்திலும் சிறந்து விளங்குகிறார்கள். குறிப்பாக கதாநாயகிகள்.
கதாநாயகிகளில் சிலர் பன்முகத் திறமைகள் கொண்டவர்களாக உள்ளனர், மேலே உள்ள புகைப்படத்தில் காணப்படும் நடிகையும் அவர்களில் ஒருவர்தான். இவர் தனது அழகு மற்றும் நடிப்பால் பார்வையாளர்களை ஈர்ப்பது மட்டுமில்லாமல், வேறொரு துறையிலும் தன் திறமையைக் காட்டி இருக்கிறார். இவர் தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்றவர். குத்துச்சண்டையிலும் சிறந்தவர். அவர் யார் தெரியுமா? அவர் சில படங்களில் நடித்திருந்தாலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.
அவர் வேறு யாருமல்ல, ரித்திகா சிங்தான். ரித்திகா சிங் டிசம்பர் 16, 1994 அன்று மும்பையில் பிறந்தார். ரித்திகா ஒரு நடிகை மட்டுமல்ல, ஒரு குத்துச்சண்டை வீராங்கனையும் கூட.
2009 ஆம் ஆண்டு ஆசிய உட்புற விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர், சூப்பர் பைட் லீக்கையும் வென்றார். இதன் பிறகு, சுதா கொங்கரா இயக்கிய "இறுதிச்சுற்று" படத்தில் முன்னணி வேடத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை, வேட்டையன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.