'நான்தான் வரலாறு' - நந்தமுரி பாலகிருஷ்ணா
’அகண்டா 2’ படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.;
சென்னை,
“அகண்டா 2: தாண்டவம்” படம் வருகிற 5-ம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இதற்கிடையில், தயாரிப்பாளர்கள் ஐதராபாத்தில் ஒரு பிரீரிலீஸ் நிகழ்வை நேற்று நடத்தினர். இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய நந்தமுரி பாலகிருஷ்ணா,ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அர்த்தமுள்ள படங்களை கொடிக்க எப்போதும் பாடுபடுவதாக கூறினார்.
மேலும், "வரலாற்றில் பலரிருக்கலாம், ஆனால் வரலாற்றை மீண்டும் மீண்டும் எழுதி மறுபடி உருவாக்குபவர் ஒருவரே. நான்தான் அந்த வரலாறு" என்று கூறினார்.
போயபதி ஸ்ரீனு இயக்கும் இப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ராம் அச்சந்தா மற்றும் கோபிசந்த் அச்சந்தா ஆகியோரால் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ஆதி பினிசெட்டி வில்லனாக நடித்திருக்கிறார்.