'டியூட்' படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு
'டியூட்' படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார்.;
சென்னை,
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டியூட்' படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் 'டியூட்' படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்தப் படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ''ஊரும் பிளட்'' வருகிற 28-ம் தேதி வெளியாக உள்ளது. கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளது.
இது மட்டுமில்லாமல், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி' படமும் தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளது. பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.