ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு:பாலையாவின் மாஸ் நடிப்பில் 'அகண்டா-2'
பாலையா, சம்யுக்தா மேனன் நடித்துள்ள அகண்டா 2 திரைப்படம் வருகிற 5ந் தேதி வெளியாக உள்ளது.;
14 ரீல்ஸ் பிளஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் ஐ.வி.ஒய். என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா, இஷன் சக்சேனா தயாரித்து, போயபட்டி ஸ்ரீனு எழுதி இயக்கியுள்ள புதிய படம் 'அகண்டா-2'. பாலையா கதாநாயகனாக நடிக்கிறார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். ஆதி, ஹர்ஷாலி மல்ஹோத்ரா, கபிர் துஹார் சிங் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற டிசம்பர் 5-ந்தேதி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்தநிலையில் 'அகண்டா-2' படம் குறித்து அதன் இயக்குனர் போயபட்டி ஸ்ரீனு கூறியதாவது:-
2021-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன், வசூலிலும் சாதனை படைத்த 'அகண்டா' படத்தின் இரண்டாம் பாகமாக 'அகண்டா-2' தயாராகி இருக்கிறது. வழக்கம் போலவே இந்த படத்திலும் பாலகிருஷ்ணா மாஸ் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முதல் பாகத்தைப் போலவே ரசிகர்கள் விரும்பும்பும் அத்தனை அம்சங்களும் கொண்ட அட்டகாசமான படமாக இது தயாராகிறது.
ஆன்மிகமும், அதிரடியும் கலந்த இப்படத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்து படைப்பது உறுதி. அதேபோல சம்யுக்தா மேனன் உள்பட நடிகர் -நடிகைகள் அத்தனை பேரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ராம்ப்ரசாத் ஒளிப்பதிவில், தமனின் இசையில் படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே தயாராகி இருக்கிறது. முதல் பாகம் தெலுங்கு தாண்டி இதர மொழிகளிலும் பெரும் வரவேற்பை பெற்றது. அதே போல இந்த பாகமும் இந்திய அளவில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.
மொழியை கடந்து நல்ல படங்களுக்கு ரசிகர்கள் அங்கீகாரம் தர தவறியது கிடையாது. அது இந்த படத்திலும் நிச்சயம் எதிரொலிக்கும் என்று நம்புகிறோம். 'அகண்டா-2' படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கிடையே வருகிற டிசம்பர் 5-ந்தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. நிச்சயம் இந்த ஆண்டு இறுதியில் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் படமாக இது அமையும் என்பது உறுதி", என்று இயக்குனர் போயபட்டி ஸ்ரீனு தெரிவித்தார்.