பழம்பெரும் கன்னட நடிகர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி

கன்னட சினிமா துறையில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.;

Update:2025-11-30 15:42 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த பழம்பெரும் கன்னட நடிகர் எம்.எஸ்.உமேஷ் (வயது 84). இவர் கன்னட சினிமா துறையில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

இதனிடையே, நடிகர் எம்.எஸ்.உமேஷ் கடந்த மாதம் வீட்டில் மாடி படியில் இருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. மேலும், அவருக்கு புற்றுநோய் பாதிப்பும் தீவிரமானது. இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.எஸ்.உமேஷ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், எம்.எஸ்.உமேஷ் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்