ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகர் போதைப்பொருள் வழக்கில் கைது

அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகர் ஹேலி ஜோயல் ஓஸ்மெண்ட்;

Update:2025-04-20 08:25 IST

வாஷிங்டன்,

அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகர் ஹேலி ஜோயல் ஓஸ்மெண்ட். இவர் பல்வேறு பாலிவுட் படங்களில் நடத்துள்ளார். இவர் நடித்த தி சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படம் மூலம் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பனிச்சறுக்கு விளையாட்டு பூங்காவுக்கு ஜோயல் சென்றார். மதுபோதையில் இருந்த ஜோயல் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் ஜோயலிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருள் வைத்திருத்தல், மதுபோதையில் இடையூறு செய்தல், ஆபாச வார்த்தைகளை பேசுதல் உள்ளிட்ட வழக்குகளில் ஜோயலை கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்