காதலரை கரம் பிடித்த பிரபல பாடகி - வைரலாகும் புகைப்படம்

திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பல ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.;

Update:2025-09-29 08:01 IST

வாஷிங்டன்,

அமெரிக்க நட்சத்திர பாடகி செலினா கோம்ஸ் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். அவர் தனது காதலர் பென்னி பிளாங்கோவை கரம் பிடித்துள்ளார். கடந்த 27 அன்று நடைபெற்ற இந்த பிரமாண்டமான திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பல ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

டெய்லர் ஸ்விப்ட், பாரிஸ் ஹில்டன், மார்ட்டின் ஷார்ட் மற்றும் ஆஷ்லே பார்க் போன்ற ஹாலிவுட் நடிகர்கள் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர். சமீபத்தில், பாடகியின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Advertising
Advertising

பாடகி செலினா கோம்ஸ் மற்றும் பென்னி பிளாங்கோ பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்