இந்தியாவில் ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் மற்றும் சூப்பர்மேன் படங்களின் வசூல் எவ்வளவு ?

''ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்'' படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.;

Update:2025-07-18 15:31 IST

சென்னை,

''ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்'' மற்றும்  ''சூப்பர்மேன்'' திரைப்படங்கள் இந்தியாவில் நல்ல வசூல் பார்த்துள்ளன.

கடந்த 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ''ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்'' படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும், அப்படம் 13 நாட்களில் சுமார் ரூ.97 கோடி வசூலித்தது. முதல் வாரத்தில் மட்டும் சுமார் ரூ. 70 கோடி வசூலித்தது. விரைவில் ரூ.100 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேம்ஸ் கன் இயக்கிய ''சூப்பர்மேன்'' படமும் ஒரு அற்புதமான தொடக்கத்தை பெற்றிருக்கிறது. கடந்த 10-ந் தேதி வெளியான 'சூப்பர்மேன்'' படம் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ரூ. 46 கோடி வசூலித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்