நான் காதலில் இல்லை - நடிகை ருக்மிணி வசந்த்

நான் இப்போது வரை காதலில் இல்லை என்று நடிகை ருக்மிணி வசந்த் தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-20 03:37 IST

கோப்புப்படம் 

‘காந்தாரா' படத்துக்கு பிறகு, இந்தியா முழுவதும் பேசப்படும் நடிகையாக உயர்ந்திருக்கிறார், ருக்மிணி வசந்த். ராஷ்மிகா மந்தனாவுக்கு பிறகு ‘நேஷனல் கிரஷ்' என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டும் வருகிறார்.

தமிழில் விஜய் சேதுபதியுடன் ஏஸ் மற்றும் சிவகார்த்திகேயனுடன் மதராஸி படங்களில் நடித்திருக்கும் ருக்மிணி வசந்த், அடுத்ததாக மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். விரைவில் அதுதொடர்பான அறிவிப்பும் வெளியாக இருக்கிறது.

இதற்கிடையில் ருக்மிணி காதலில் இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இளைஞர் ஒருவருடன் இருக்கும் புகைப்படமும் வைரலானது. இதனை ருக்மினி வசந்த் மறுத்துள்ளார். “நண்பர்களுடன் இருந்த புகைப்படங்களை சிலர் தவறான தகவல்களை சேர்த்து பரப்பி விட்டனர். நான் இப்போது வரை காதலில் இல்லை. காதல் வந்தால் நிச்சயம் ரசிகர்களுக்கு சொல்வேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்