மீண்டும் இணையும் விஷால் - சுந்தர்.சி கூட்டணி
சுந்தர் சி - விஷால் - ஹிப் ஹாப் தமிழா ஆதி மீண்டும் இணையும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.;
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஷால். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘மதகஜராஜா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, விஷால் – சுந்தர்.சி மீண்டும் இணையும் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கவுள்ளார்.
விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணியில் வெளியான 'மதகஜராஜா, ஆம்பள, ஆக்சன்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் சுந்தர்.சி. அதனை முடித்துவிட்டு விஷால் படத்தின் முதற்கட்டப் பணிகளை கவனிக்கவுள்ளார்.
இந்நிலையில், சுந்தர் சி - விஷால் - ஹிப் ஹாப் தமிழா ஆதி மீண்டும் இணையும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.