'பைசன்' என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்- மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படம் நாளை வெளியாக உள்ளது.;

Update:2025-10-16 07:49 IST

சென்னை,

மாரி செல்வராஜ், நடிகர் துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களின் சந்திப்பின் போது, பைசன் படத்திற்கு ஆங்கில டைட்டில் வைத்ததற்கு மன்னிப்புக் கேட்டார். அதாவது, “படத்திற்கு 'பைசன்' என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டைக் கடந்து படத்தை கொண்டு செல்ல பொதுவான தலைப்பு வைக்க தயாரிப்பு நிறுவனம் கூறியது. என்னுடைய திரைக்கதை புத்தகத்தில் இன்னமும் 'காளமாடன்' என்றுதான் உள்ளது” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்