அது ஒரு கெட்ட வார்த்தை என்று எனக்குத் தெரியாது...ராசி கன்னா

ராசி கன்னா தற்போது தெலுசு கடா படத்தில் நடித்துள்ளார்.;

Update:2025-10-14 08:04 IST

சென்னை,

சமீபத்தில் பட புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட ராசி கன்னா, உணர்ச்சிவசப்பட்டு தவறுதலாக ஒரு வார்த்தையை பேசினார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ராசி கன்னா அதனை தெளிவுபடுத்தினார். அது ஒரு கெட்ட வார்த்தை மன்று தனக்குத் தெரியாது என்றும் அது ஒரு அழகான வார்த்தை என்றுதான் நினைத்ததாகவும் கூறினார்.

ராசி கன்னா தற்போது தெலுசு கடா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரபல ஸ்டைலிஸ்ட் நீரஜா கோனா இயக்கி உள்ளார். இதில் ஸ்ரீநிதி ஷெட்டி, சித்து ஜொன்னலகட்டா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்