பவன் கல்யாண் படத்துக்காக 5 ஆண்டுகளை இழந்தேன் - நிதி அகர்வால்

பவன் கல்யாணுடன் நடித்தது என் வாழ்க்கையில் மிகப்பெரிய பரிசு என்று நிதி அகர்வால் கூறியுள்ளார்.;

Update:2025-05-24 22:30 IST

தமிழில் சிம்புவுடன் 'ஈஸ்வரன்', ரவிமோகனுடன் 'பூமி', உதயநிதியுடன் 'கலகத் தலைவன்' ஆகிய படங்களில் நடித்தவர், நிதி அகர்வால். கடந்த சில ஆண்டுகளாக இவர் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இவர் தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாணுடன் நடித்துள்ள 'ஹரிஹர வீர மல்லு' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நிதி அகர்வால், 'ஹரி ஹர வீர மல்லு' படம், எனக்கு மிகவும் சவாலான திரைப்படம் ஆகும். அந்த சவாலை சமாளிக்க படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் ஒத்துழைப்பு அளித்தனர். இந்தப் படத்திற்காக நான் கடந்த 5 ஆண்டுகளாக வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தேன்.

பவன் கல்யாணுடன் நடித்தது, என் வாழ்க்கையில் மிகப்பெரிய பரிசு. அவர் ஒரு அற்புதமான நடிகர். மனிதநேயம் கொண்டவர். அவருடன் நடித்த இந்தப் படத்திற்குப் பிறகு, என்னைத் தேடி பல நல்ல வாய்ப்புகள் நிச்சயம் வரும். தமிழில் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மீண்டும் தமிழில் நடிப்பேன்" என்று கூறினார். நிதி அகர்வால், அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'தி ராஜா சாப்' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்