'எனது தமிழ் அறிமுக படம் அப்படி இருக்க விரும்புகிறேன்'- நடிகை குஷி ரவி

'தியா' என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை குஷி ரவி.;

Update:2025-05-13 10:10 IST

சென்னை,

வளர்ந்து வரும் கன்னட நடிகை குஷி ரவி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான 'தியா' என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார். கொரோனா காரணமாக ஓடிடியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

குஷி ரவியின் நடிப்பு பாராட்டப்பட்டது. தொடர்ந்து, 'பிண்டம்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். கடந்த 2021-ம் ஆண்டு அஸ்வின் குமாருடன் இணைந்து 10 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்ற 'அடிபோலி' என்ற இசை ஆல்பத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தமிழில் இருந்து விலகிய குஷி, சமீபத்தில் ''பட்டி' என்ற ஆல்பம் பாடலில் நடித்திருந்தார்.

இருப்பினும், இதுவரை எந்த தமிழ் படத்திலும் குஷி ரவி நடிக்கவில்லை. இந்நிலையில், சமீபத்திய பேட்டியில், தமிழ் அறிமுக படம் குறித்து குஷி பேசினார். அவர் கூறுகையில்,

"நான் சரியான ஸ்கிரிப்ட்டிற்காக காத்திருக்கிறேன். 'தியா'வை போலவே எனது தமிழ் அறிமுக படமும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றார்

எந்த இயக்குனருடன் தமிழில் பணியாற்ற விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், 'நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் மணிரத்னம் சாருக்கு என் பட்டியலில் முதலிடம். அதேபோல் ராஜ்குமார் பெரியசாமி சாருடனும் நான் பணியாற்ற விரும்புகிறேன். எனக்கு நல்ல வலுவான கதாபாத்திரத்தை கொடுக்கும் எவருடனும் பணியாற்றுவேன்" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்