"அந்த படத்தை எடுத்துவிட்டால் என் மனம் நிறைவடைந்ததாக உணர்வேன்" - அமீர்கான்

மகாபாரதம் என் கடைசிப் படம் என்று நான் எங்கும் சொல்லவில்லை என்று அமீர்கான் குறிப்பிட்டுள்ளார்.;

Update:2025-06-16 15:49 IST

மும்பை,

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் அமீர்கான். இவர் தற்போது ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியுள்ள சித்தாரே ஜமீன் பர் என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார். இதில் நடிகை ஜெனிலியா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் அமீர்கான் 'லாகூர் 1947' என்ற படத்தை தயாரித்தும் வருகிறார். அதனை தொடர்ந்து தனது நீண்ட நாள் கனவான மகாபாரத்தை படமாக எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமீர்கான், 'மகாபாரதம்' எனது கனவுப் படம். அப்படத்திற்குப் பிறகு என்னால் வேறு எதையும் செய்ய முடியாது என்று பேசியிருந்தார். இதற்கிடையில் 'மகாபாரதம்' தான் அவரது கடைசி படம் என்றும், இதற்கு பிறகு அவர் நடிக்கமாட்டார் என்றும் பேசப்பட்டது. இது பாலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமீர்கான் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், 'மகாபாரதம்' கதை பல ஆண்டுகளாக என்னிடம் இருக்கிறது. அதை திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எப்போதும் எனது கனவாக இருந்தது என்பது உண்மைதான். என் வாழ்நாளில் அப்படத்தை எடுத்துவிட்டால் என் மனம் நிறைவடைந்ததாக உணர்வேன்.

ஆனால், அதுதான் என் கடைசிப் படம் என்று நான் எங்கும் சொல்லவில்லை. ஒருவேளை நான் அதை என் கனவுப் படம் என்று கூறியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம். நான் சினிமாவில் வெகுதூரம் பயணிக்க வேண்டும் என்று நினைக்கிறேன், என்று அமீர்கான் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்