''தனுஷை முதுகில் குத்த மாட்டேன்'' - ஜி.வி.பிரகாஷ்

தனுஷ் நடித்துள்ள ''இட்லி கடை'' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.;

Update:2025-09-10 02:45 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் தனுஷ். இவரது இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. தனுஷே இயக்கி நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

முன்னதாக தனுஷின் ‘வாத்தி' படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைத்திருந்தார். இப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜி.வி.பிரகாசுக்கு கிடைத்தது. தற்போது 2-வது முறையாக ‘இட்லி கடை' படத்திற்காக இருவரும் இணைந்துள்ளனர். இப்படம் அடுத்த மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது.

இதற்கிடையில், தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த ''ராயன்'' படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்துவிட்டதாக ஜி.வி.பிரகாஷ் கூறி இருக்கிறார். அவர் கூறுகையில், '' 'ராயன்' படத்தில் தனுஷின் தம்பி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் நடிக்க மறுத்துவிட்டேன். கதைப்படி தனுசின் முதுகில் குத்தும் கதாபாத்திரம் அது. கதைக்காக கூட நான் அதை செய்ய மாட்டேன். அதற்கு நான் நேரடி வில்லனாகவே நடித்துவிடுவேன்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்