நடிகர் ஷான் நடிக்கும் “ரேஜ்” படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

ரிவெஞ்ச் திரில்லராக உருவாகி வரும் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.;

Update:2025-12-19 13:55 IST

இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ரேஜ்'. இந்த படத்தில் நடிகர் ஷான் நாயகனாக நடித்து வருகிறார். ஷெர்லி பவித்ரா நாயகியாக நடித்து வருகிறார். மேலும் பவன் ஜினோ தாமஸ், ஆர்யன், பிரதோஷ், விக்ரம் ஆனந்த் ஆகியோர் வில்லன் பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

எம். எஸ். நவீன் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு விபின் .ஆர் இசையமைக்கிறார். லவ் வித் எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை இயக்கி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் அனாமிகா ரவீந்திரநாத்- அபிஷேக் ரவீந்திரநாத் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மாறுபட்ட களத்தில் லவ் டிராமா பின்னணியில், ரிவெஞ்ச் திரில்லராக உருவாகி வரும் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்