இளையராஜா வழக்கு - நடிகை வனிதாவுக்கு நோட்டீஸ்

வனிதா விஜயகுமார் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2025-07-14 12:01 IST

சென்னை,

நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள தனது பாடலை நீக்கக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த வழக்கில் வனிதா விஜயகுமார் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நடிகை வனிதா விஜயகுமார், தனது மகள் ஜோவிகா தயாரிப்பில் 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் ராபர்ட் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதற்கிடையில், 'மைக்கேல் மதன காமராஜன்' திரைப்படத்தில் இடம்பெற்ற தனது 'ராத்திரி சிவராத்திரி' பாடலை அனுமதியின்றி பயன்படுத்தி இருப்பதாகவும், படத்திலிருந்து அப்பாடலை நீக்கக் கோரியும் இசையமைப்பாளர் இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது, இளையராஜா வழக்கில் வனிதா விஜயகுமார் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்