கமலுக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகருக்கு பதவி வழங்கிய பா.ஜ.க

நடிகர் ரவிச்சந்திரனுக்கு பா.ஜ.க.வில் மாநில பிரச்சார அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.;

Update:2025-11-24 19:26 IST

விஜய் டிவியில் `பாண்டியன் ஸ்டோர்ஸ்', சன் டிவியில் `மருமகள்' ஆகிய சீரியல்களில் நடித்தவர் ரவிச்சந்திரன். சில படங்களிலும் நடித்திருந்தாலும் டிவியில் அதிக கவனம் செலுத்தி வருபவர். சமீபமாக அரசியல் கருத்துகளை யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பேசி வருகிறார். குறிப்பாக பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன், சனாதானம் குறித்து நடிகர் சூர்யாவின் அகரம் பவுன்டேஷன் விழாவில் கமல் பேசிய பேச்சைக் கண்டித்து நடிகர் ரவிச்சந்திரன் யூடியூப் வலைதளத்தில், ‘கமல் கழுத்தை அறுத்து விடுவேன்’ என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார். அப்போது மக்கள் நீதி மயயம் சார்பில் இவர் மீது போலீஸில் புகார் தரப்பட்டது

இந்த நிலையில் தற்போது பா.ஜ.க.வில் நடிகர் ரவிச்சந்திரனுக்கு மாநில பிரச்சார அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்