‘ஆசை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு...எப்போது திரைக்கு வருகிறது தெரியுமா?

இந்த படத்தில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார்.;

Update:2026-01-17 12:29 IST

சென்னை,

ஷிவ் மோஹா இயக்கத்தில் கதிர், திவ்ய பாரதி நடிக்கும் ‘ஆசை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 2019-ம் ஆண்டு மலையாளத்தில் இயக்குனர் அனுராஜ் மனோகர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் 'இஷ்க்'. தற்போது இந்த திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை 'ஜீரோ' புகழ் ஷிவ் மோஹா இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை திவ்ய பாரதி நடிக்கிறார்.

இந்த படத்துக்கு 'ஆசை' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை பூர்ணா, லிங்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ரேவா இசையமைக்கிறார். பாபு குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சுதர்சன் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த நிலையில் ‘ஆசை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் மார்ச் 6-ம் தேதி திரைக்கு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்