வற்புறுத்திய இயக்குனர்... 20 வயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் - மனம் திறந்த தமன்னா

20 வயதில் தான் சந்தித்த கசப்பான அனுபவத்தைப் பற்றி சமீபத்திய நேர்காணலில் தமன்னா மனம் திறந்துள்ளார்.;

Update:2026-01-16 20:56 IST

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாது, பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களிலும் தொடர்ந்து நடித்துவரும் நடிகை தமன்னா, திரையுலகில் கால் பதித்து கிட்டத்தட்ட இரண்டு சகாப்தங்கள் கடந்தபோதும் தனது கிரேஸை இழக்காமல் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

தற்போதுள்ள நடிகைகளுடன் போட்டியிட்டு நடிப்பதுடன், சிறப்புப் பாடல்கள் மூலமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமன்னா ஒரு சிறப்புப் பாடலில் நடிக்க சுமார் ரூ. 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 20 வயதில் தான் சந்தித்த ஒரு கசப்பான அனுபவத்தைப் பற்றி சமீபத்திய நேர்காணலில் அவர் மனம் திறந்துள்ளார்.

ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது, நெருக்கமான காட்சியில் நடிக்க இயக்குனர் வற்புறுத்தியதாக தமன்னா தெரிவித்தார். அந்தக் காட்சியில் நடிக்க தனக்கு அசவுகரியமாக இருந்தது என்றும், அதை இயக்குனரிடம் நேரடியாக தெரிவித்ததாகவும் கூறினார். ஆனால் இயக்குனர் அனைவரின் முன்னாடியும் “கதாநாயகியை மாற்றுங்கள்” என்று கூறியதாக தமன்னா வெளிப்படுத்தினார்.

அந்தக் காட்சிக்காக இயக்குனர் தனக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்ததாகவும், இருந்தாலும் மனம் தளராமல் உறுதியாக நின்றதாகவும், என்ன நடந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியத்தை அந்த நேரத்தில் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். இறுதியில், அந்த இயக்குனர் மன்னிப்பு கேட்டதாகவும் கூறினார்.

இருப்பினும், அது எந்த படம், எந்த இயக்குனர் என்பதற்கான விவரங்களை தமன்னா வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் அந்த படம் எது என்று பல்வேறு ஊகங்களை முன்வைத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்