’என் அறை முழுக்க அந்த ஹீரோவோட புகைப்படங்கள்தான்’...- நடிகை நாக துர்கா

நடிகர் பவிஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நாக துர்கா கதாநாயகியாக நடிக்கிறார்.;

Update:2026-01-17 10:54 IST

சென்னை,

நாட்டுப்புற பாடல்களுக்கு பெயர் பெற்ற நாக துர்கா ஒரு பாரம்பரிய நடனக் கலைஞர். "தரிபொன்தொத்துண்டு" (டிஜே பதிப்பு) பாடலுக்காக அவர் பெரும் புகழ் பெற்றார்.  இந்தப் பாடல் சமூக ஊடகங்களில் வைரலானது. இது இதுவரை யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது.

இந்த வைரல் பெண்ணுக்கு தற்போது தமிழ் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட நடிகர் பவிஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நாக துர்கா கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில், ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட இவர், தான் பிரபாஸின் தீவிர ரசிகை என்று கூறினார். சிறுவயதிலிருந்தே பிரபாஸ் மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாக கூறினார். எட்டாம் (அ) ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரை, தனது அறை முழுவதும் பிரபாஸின் புகைப்படங்கள் இருந்ததாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்