கூலி படத்தின் கதை இதுவா?.. இணையத்தில் லீக் ஆன தகவல்!
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி படம் ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் இடம் பிடித்துள்ள மோனிகா பாடல் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், கூலி திரைப்படத்தின் கதை இணையத்தில் லீக் ஆகி உள்ளதாக ஒரு தகவல் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதன்படி, ரஜினிகாந்த் ஒரு பெரிய கேங்க்ஸ்டர். இவர், ஒரு கட்டத்தில் தனது தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறார். அதற்காக தனது எதிரிகளை பழிவாங்கிவிட்டு, பின்னர் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்.
இதில் ஆக்சன் மற்றும் எமோஷ்னல் கதையை தனது ஸ்டைலில் லோகேஷ் கனகராஜ் வடிவமைத்துள்ளது எப்படி வந்துள்ளது என்பதை பொறுத்திருந்து ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்கில் பார்ப்போம்.