'வார் 2' - டப்பிங் பணியை துவங்கிய ஜூனியர் என்டிஆர்

இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது.;

Update:2025-06-12 02:30 IST

சென்னை,

'சலார்' இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் ஜூனியர் என்டிஆர், தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'வார் 2' படத்தின் டப்பிங் பணியை தொடங்கியுள்ளார்.

அவர் டப்பிங் ஸ்டுடியோவுக்குள் நுழைவது போன்ற ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஜூனியர் என்.டி.ஆர், ஹிருத்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'வார் 2'. யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் தாயாரிக்கும் இப்படத்தை 'பிரம்மாஸ்திரா' பட இயக்குனர் அயன் முகர்ஜி இயக்குகிறார்.

சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது. 


Tags:    

மேலும் செய்திகள்