ராம் இயக்கும் 'பறந்து போ' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இப்படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.;

Update:2025-05-12 20:11 IST

சென்னை,

எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர் இயக்குனர் ராம் . "கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி" உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்