திருமணத்திற்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முதல் தெலுங்கு படம்...ஹீரோ இவரா?

இப்படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸில் நடைபெற உள்ளதாக தெரிகிறது.;

Update:2025-10-11 09:21 IST

சென்னை,

விஜய் தேவரகொண்டாவும் இயக்குனர் ரவி கிரண் கோலாவும் ஒரு புதிய படத்திற்காக இணைந்துள்ளனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸில் நடைபெற உள்ளதாக தெரிகிறது.

சுவாரசியமாக இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் திருமணத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் முதல் தெலுங்கு படமாக இது இருக்கும்.

விஜய் தேவரகொண்டாவும் கீர்த்தி சுரேஷும் முன்பு "மகாநதி" படத்தில் நடித்திருந்தாலும், ஜோடியாக நடிப்பது இதுவே முதல் முறை.

"மகாநதி" படத்தில் விஜய் தேவரகொண்டா ஒரு புகைப்படக் கலைஞராகவும், கீர்த்தி பழம்பெரும் நடிகை சாவித்ரி வேடத்திலும் நடித்தனர்.

மேலும் செய்திகள்