"அரசியல் நிகழ்வுகளின் தொகுப்பாய்".. இணையத்தில் வைரலாகும் விஜய் பாடல்

இந்த பாடல் வெளியான ஒரு மணி நேரத்திலேயே கிட்டத்தட்ட 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.;

Update:2025-12-19 07:51 IST

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்' திரைப்படம், அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது. அரசியல் களத்தில் குதித்துள்ள விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கூறப்படுவதால், இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தப் படத்தின் ‘பர்ஸ்ட் லுக்' மற்றும் ‘தளபதி கச்சேரி...' என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் நேற்று படத்தின் இரண்டாம் பாடல் வெளியானது. ‘ஒரு பேரே வரலாறு...' என்ற அந்தப் பாடல் நேற்று யூ-டியூபில் வெளியானது முதல் வைரலானது.பிரசார வாகனத்தின் மீது விஜய் ஏறி நிற்பது, செல்பி எடுப்பது போன்ற சமகால அரசியல் நிகழ்வில் நடந்த விஜய் சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளையும் தொகுப்பாக அந்த பாடலில் இணைத்துள்ளார்கள். மேலும் அரசியல் வாடை வீசும் சில வரிகளும் பாடலில் இடம்பெற்றுள்ளது.

இந்த பாடல் வெளியான ஒரு மணி நேரத்திலேயே கிட்டத்தட்ட 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்