“காதலை நான் உண்மையிலேயே நம்புகிறேன்” – மனம் திறந்த கீர்த்தி சனோன்
காதல் பற்றிய தன்னுடைய எண்ணத்தை கீர்த்தி சனோன் பகிர்ந்து கொண்டுள்ளார்.;
மும்பை,
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர், கீர்த்தி சனோன். இவர் தனுசுடன் இணைந்து நடித்த ‘தேரே இஸ்க் மெயின்' திரைப்படம், சமீபத்தில் ரூ.150 கோடி வசூலை எட்டியிருக்கிறது. இந்தப் படத்தில் நடித்தபோது தனுசும், கீர்த்தி சனோனும் காதலிப்பதாக வதந்திகள் பரவின. இந்த நிலையில் தற்போது கீர்த்தி சனோன், தொழிலதிபரான கபீர் பஹியா என்பவருடன் சுற்றிவருவதாக செய்திகள் வெளிவருகின்றன. இதுபற்றிய உண்மை விவரம் தெரியவில்லை.
இந்த நிலையில் காதல் பற்றிய தன்னுடைய எண்ணத்தை கீர்த்தி சனோன் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் தொடுவதாக காதல் இருக்கிறது. அந்த காதலின் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. நான் உண்மையிலேயே காதலை நம்புகிறேன். அது வெறும் காதல் மட்டும் அல்ல, எல்லாவற்றிற்குமான அன்பு. அந்த அன்புதான் நமக்கு தேவை" என்று கூறியுள்ளார்.