ரூ.100 கோடி வசூலை கடந்த அக்சய்குமாரின் "கேசரி சாப்டர் 2"

இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர் சி. சங்கரன் நாயரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “கேசரி சாப்டர் 2” படம் உருவாகியுள்ளது.;

Update:2025-04-28 16:28 IST

கரண் சிங் தியாகி இயக்கத்தில் அக்சய் குமார் மற்றும் மாதவன் இணைந்து நடித்துள்ள படம் 'கேசரி அத்தியாயம் 2: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் ஜாலியன் வாலா பாக்'. இதில் மாதவன், அனன்யா பண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர் சி. சங்கரன் நாயரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது. ஜாலியன் வாலா பாக் படுகொலை பற்றிய உண்மைகளை வெளிக்கொணர சி.சங்கரன் நாயர் பிரிட்டீஸ் ராஜ்ஜியத்திற்கு எதிராக போராடினார். இந்த கதை மையமாக வைத்து தர்மா புரொடக்சன்ஸ், கேப் ஆப் குட் பிலீம்ஸ் மற்றும் லியோ மீடியா கலெக்டிவ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இப்படத்தை தயாரித்துள்ளன. படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது.

இப்படத்தை பார்த்த பாகுபலி பிரபலம் ராணா டகுபதி கூறுகையில்,"கேசரி சாப்டர் 2 ஒரு முக்கியமான படம். அது ஒவ்வொரு இந்தியர்களின் மனதிலும் ஆழமாக பதியும்' என்றார். ராணா டகுபதி இப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தெலுங்கில் வெளியிட உள்ளார்.

இந்நிலையில், "கேசரி சாப்டர் 2" படம் 10 நாட்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்