ஸ்ரீ கவுரி பிரியாவின் அடுத்த படம் 'சென்னை லவ் ஸ்டோரி'
“சென்னை லவ் ஸ்டோரி” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஸ்ரீ கவுரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார்;
சென்னை,
"பேபி" படத்தின் வெற்றிக்குப் பிறகு, எழுத்தாளரும் இயக்குனருமான சாய் ராஜேஷ் மற்றும் தயாரிப்பாளர் எஸ்கேஎன் ஆகியோர் மீண்டும் ஒரு காதல் படத்தில் இணைந்துள்ளனர்.
"சென்னை லவ் ஸ்டோரி" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் 'லவ்வர்' பட நடிகை ஸ்ரீ கவுரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். கிரண் அப்பாவரம் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவில் கிரண் அப்பாவரமும் ஸ்ரீ கவுரி பிரியாவும் கடற்கரையில் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் காட்டியுள்ளனர்.