ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு
படம் வெளியாக 3 நாட்கள் மட்டுமே இருக்கிறது, ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.;
சென்னை,
"சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை" போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் எச்.வினோத். தற்போது இவர் யை வைத்து ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்து பொங்கல் வெளியீடாக வரும் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர். மேலும் பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்கு அனுப்பிய படக்குழு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. படம் வெளியாக 3 நாட்கள் மட்டுமே இருக்கிறது, ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் படத் தயாரிப்பு நிறுவனம் அவசர வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பு வழக்கறிஞர் நீதிபதி பிடி ஆஷா முன்பு முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை இன்று மதியம் 2.30 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.