ஜனநாயகனின் 2 நாள் சாதனையை ஒரே நாளில் முந்திய பராசக்தி
தமிழில் மட்டும் ஜனநாயகனை பராசக்தி முந்தியுள்ளது.;
சென்னை,
ஜனநாயகன் டிரெய்லர் வெளியான 2 நாட்களில் 3.9 கோடி பேர் பார்த்துள்ளனர். பராசக்தி டிரெய்லரை 24 மணி நேரத்தில் 4 கோடி பேர் பார்த்துள்ளனர்
எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் வருகிற 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்துக்கு ஒருநாள் பின்னதாக சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடித்து, சுதா கொங்கரா இயக்கிய பராசக்தி திரைப்படம் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
'ஜனநாயகன்' விஜயின் கடைசி படம் என்பதால் அந்தப் படத்துடன் 'பராசக்தி' மோதுவது சில விமர்சனங்களை ஏற்படுத்தின. இது தற்போது டிரெய்லர் வெளியீட்டுக்கு பின்பு இன்னும் அதிகரித்துள்ளது. கடந்த 3ம் தேதி வெளியான விஜய்யின் 'ஜனநாயகன்' டிரெய்லரை இதுவரை 3.9 கோடி பேர் பார்த்துள்ளனர். வெளியான முதல் 24 மணி நேரத்தில் தமிழில் மட்டும் 34 மில்லியன் பார்வைகள் பெற்றிருந்தது.
ஆனால் இந்த சாதனையை பராசக்தி ஒரே நாளில் முறியடித்துள்ளது. பராசக்தி டிரெய்லர் முதல் 24 மணி நேரத்தில் தமிழில் மட்டும் 40 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. தற்போது வரை 4.2 கோடி பேர் பார்த்துள்ளனர். இதன்மூலம் ஜனநாயகனை ஒரே நாளில் பராசக்தி முந்தியுள்ளது.
எனினும் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகள் மற்றும் இன்ஸ்டாகிராம் என 'ஜனநாயகன்' டிரெய்லர் ஒட்டுமொத்தமாக 8 கோடி பார்வைகளை பெற்றுள்ளதுடன் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்திலும் உள்ளது. தமிழில் மட்டும் ஜனநாயகனை பராசக்தி முந்தியுள்ளது.