பிரபாஸை சந்திப்பதற்கு முன் இப்படிதான் நினைத்தேன், ஆனால் அவர்...- பிரபல நடிகை

பிரபாஸுடன் நடித்த அனுபவம் அவரை பற்றிய தனது பார்வையை முற்றிலுமாக மாற்றிவிட்டதாக மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.;

Update:2025-05-25 12:32 IST

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் மிகவும் திறமையான இளம் நடிகைகளில் ஒருவரான மாளவிகா மோகனன், சமீபத்தில் ரசிகர்களுடனான கேள்வி பதில் உரையாடலில் பிரபாஸ் குறித்து பேசினார்.

மாளவிகா மோகனன் தற்போது தமிழில் கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2', மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் 'ஹிருதயப்பூர்வம்' மற்றும் தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர், பிரபாஸுடன் நடித்த அனுபவம் அவரை பற்றிய தனது பார்வையை முற்றிலுமாக மாற்றிவிட்டதாக கூறியுள்ளார். அவர் கூறுகையில்,

"பிரபாஸ் சாரை சந்திப்பதற்கு முன்பு, அவருடைய நேர்காணல்களை பார்த்திருக்கிறேன். அப்போது அவர் மிகவும் அமைதியான, அதிகம் பேசாத ஒருவர் என்று நினைத்தேன். ஆனால், அவரை நேரில் சந்தித்தபோதுதான், அவர் அற்புதமாக பேச கூடியவர், மிகவும் வேடிக்கையானவர் என்று தெரிந்தது. அவரைச் சுற்றி எப்போதும் உற்சாகம் இருக்கும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்