'மனிதர்கள்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராம் இந்திரா இயக்கியுள்ள 'மனிதர்கள்' படம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.;

Update:2025-05-22 22:44 IST

சென்னை,

அறிமுக இயக்குனர் ராம் இந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மனிதர்கள்'. இந்த படத்தை ஸ்டூடியோ மூவிங் டர்டில் மற்றும் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து, வித்தியாசமான களத்தில் புதுமையான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

யதார்த்த பாணியில் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள இதில் பெண் காதபாத்திரமே கிடையாது. இப்படம் ஒரு இரவில் 5 நண்பர்கள் சிக்கிக் கொண்டு அவர்கள் சந்திக்கும் பயத்தையும் பதட்டத்தையும் மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிலேஸ் எல் மேத்யூ இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படம் வருகிற 23-ந் தேதி (நாளை) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்ததது. ஆனால் படம் நாளை வெளியாகவில்லை. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற மே 30-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்