மீண்டும் திரைக்கு வரும் மங்காத்தா...தேதி அறிவிப்பு
அஜித் வரும் காட்சிகள் முழுவதும் பின்னணி இசையில் யுவன்சங்கர் ராஜா அதிர வைத்திருப்பார்.;
சென்னை,
வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த 2011ல் வெளியான ‘மங்காத்தா’ படத்தில் நீண்ட நாட்கள் கழித்து நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார் நடிகர் அஜித். திரை வாழ்க்கையில் சிறிய பின்னடைவைச் சந்தித்த நடிகர் அஜித்துக்கு ‘மங்காத்தா’ படம் பெரும் 'கம்பேக்'காக அமைந்தது. அதற்கு காரணம் அஜித்தின் கதாபாத்திரமும், பின்னணி இசையும் தான். கதாநாயகனாக அஜித்தை கொண்டாடிய ரசிகர்கள் எல்லாம் வில்லனாக கொண்டாட வைத்த படம் ‘மங்காத்தா’.
அஜித் வரும் காட்சிகள் முழுவதும் பின்னணி இசையில் யுவன்சங்கர் ராஜா அதிர வைத்திருப்பார். ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகள் மக்களை பிரமிக்க வைத்தது.
இதற்கிடையில், ‘மங்காத்தா’ படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் கிங்மேக்கர் என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ‘மங்காத்தா’ திரைப்படம் 23ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Mankatha daa! The Kingmaker is back to meet you all ♠️ #Mankatha Re-releasing from January 23 in theatres near you!#AjithKumar @vp_offl @thisisysr @akarjunofficial @trishtrashers @actor_vaibhav @Premgiamaren @AshwinKakumanu @MahatOfficial @andrea_jeremiah @iamlakshmirai… pic.twitter.com/duMk855DrH
— Sun Pictures (@sunpictures) January 4, 2026