நிவின் பாலி நடித்த ‘சர்வம் மாயா’ படம் ரூ.100 கோடி வசூல்
சர்வம் மாயா படம் வெளியான 10 நாட்களில் ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளது.;
சென்னை,
மலையாள நடிகர் நிவின் பாலி கடந்த சில வருடங்களாக பல தோல்விகளைச் சந்தித்தார். இருப்பினும், நிவின் பாலி இப்போது அகில் சத்யன் இயக்கிய ’சர்வம் மாயா’ என்ற திகில் நகைச்சுவை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.
கடந்த 25-ம் தேதி வெளியான ’சர்வம் மாயா’ படம் மோகன்லாலின் ’விருஷபா’ படத்துடன் பாக்ஸ் ஆபீஸில் மோதியது. இதில், நிவின் பாலி படம் ஆரம்பத்திலிருந்தே பந்தயத்தில் ஆதிக்கம் செலுத்தியது. மேலும், நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இப்படம் முதல் வாரத்தில் மட்டும் ரூ. 76 கோடி வசூலித்தது. விரைவில் இப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், சர்வம் மாயா படம் வெளியான 10 நாட்களில் ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்த படத்தில், ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன், ஜனார்தனன், ரகுநாத் பலேரி மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பயர்பிளை பிலிம்ஸ் மற்றும் அகில் சத்யன் பிலிம்ஸ் ஆகிய பதாகைகளின் கீழ் அஜய குமார் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் தயாரித்த இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.