ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற "மயிலா" திரைப்படம்
‘மயிலா’ திரைப்படம் 55வது ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.;
சென்னை,
`குரங்கு பொம்மை', `யாத்திசை', `மாவீரன்', `அயலான்', `அந்தகன்' எனப் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் செம்மலர் அன்னம். இவர் சில குறும்படங்களையும் இயக்கி உள்ளார். இவர் முதன்முறையாக ‛மயிலா' என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இதில் மெலோடி டார்கஸ், வி. சுடர்கொடி, கீதா கைலாசம், சத்யா மருதானி, ஆட்டோ சந்திரன், RJ பிரியங்கா, மற்றும் ஜானகி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தை பின்னணியாகக் கொண்ட இப்படத்தினை நியூட்டன் சினிமா கம்பெனி தயாரித்துள்ளது.
இந்த நிலையில், இப்படம் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. அதாவது, ‘மயிலா’ திரைப்படம் 55வது ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா (IFFR)ல் 'பிரைட் ப்யூச்சர்' (Bright Future) என்ற பிரிவில் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8, 2026 வரை திரையிடப்பட உள்ளது.