’மீசைய முறுக்கு 2’...உறுதிப்படுத்திய ஹிப்ஹாப் ஆதி
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஹிப்ஹாப் ஆதி ஏற்றுள்ளார்.;
சென்னை,
"மீசைய முறுக்கு" படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதை மலேசியாவில் நடைபெற்ற அவரது இசை நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் ஆதி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்
இசையமைப்பாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய ஹிப் ஹாப் ஆதி, தனது முதல் படமான மீசைய முறுக்கு மூலம் கதாநாயகன், இயக்குநர் என இரு வேடங்களிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
தற்போது அதன் 2-ம் பாகத்தை இயக்க உள்ளதாக ஹிப் ஹாப் ஆதி தெரிவித்துள்ளார். சுந்தர் சி - குஷ்பு தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ‘மீசைய முறுக்கு 2’ என்ற பெயரில் உருவாகும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஹிப் ஹாப் ஆதி ஏற்றுள்ளார்.