ரீ-ரிலீஸில் அஜித்துடன் மோதும் விஜய் படம்

23ம் தேதி விஜய்யின் ‘தெறி’ ரீ-ரிலீஸாகும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-17 18:00 IST

அட்லி இயக்​கிய ‘தெறி’ ​படத்​தில் விஜய்​யுடன் சமந்​தா, எமி ஜாக்​சன், ராதி​கா, இயக்​குநர் மகேந்​திரன், ராஜேந்திரன்உள்பட பலர் நடித்திருந்தனர். இப்​படம் கடந்த 2016-ம் ஆண்டு வெளி​யானது. இதற்​கு ஜி.​வி.பிர​காஷ் இசை அமைத்​திருந்​தார்.இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் ரிலீஸ் ஆனது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த 2011ல் வெளியான ‘மங்காத்தா’ படத்தில் நீண்ட நாட்கள் கழித்து நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார் நடிகர் அஜித். திரை வாழ்க்கையில் சிறிய பின்னடைவைச் சந்தித்த நடிகர் அஜித்துக்கு ‘மங்காத்தா’ படம் பெரும் 'கம்பேக்'காக அமைந்தது. அதற்கு காரணம் அஜித்தின் கதாபாத்திரமும், பின்னணி இசையும் தான். கதாநாயகனாக அஜித்தை கொண்டாடிய ரசிகர்கள் எல்லாம் வில்லனாக கொண்டாட வைத்த படம் ‘மங்காத்தா’.‘மங்காத்தா’ திரைப்படம் வரும் 23ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், வரும் 23ம் தேதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தெறி’ திரைப்படம் ரீ-ரிலீஸாகும் என்று பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார்.‘தெறி’ படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் நாளை வெளியாகிறது.

ரீ-ரிலீஸில் அஜித்தின் “மங்காத்தா” படத்துடன் விஜய்யின் “தெறி” படம் மோத உள்ளதால் அஜித், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்