''விஸ்வம்பரா'' - சிறப்பு பாடலின் படப்பிடிப்பை துவங்கிய நடிகை

இந்த சிறப்பு பாடலில் சிரஞ்சீவியுடன் இணைந்து பாலிவுட் நடிகை மவுனி ராய் நனடமாடுகிறார்.;

Update:2025-07-25 12:04 IST

சென்னை,

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ''விஸ்வம்பரா'' படப்பிடிப்பு தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இன்னும் ஒரு சிறப்பு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது.

இந்த சிறப்பு பாடலில் சிரஞ்சீவியுடன் இணைந்து பாலிவுட் நடிகை மவுனி ராய் நனடமாடுகிறார். இதற்கான படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சிறப்புப் பாடல் சிரஞ்சீவியின் பழைய ஹிட் பாடல்களின் ரீமிக்ஸாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தப் பாடலுக்கு ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டபோதிலும், வெளியீட்டு தேதி இன்னும் வெளியாகாமலேயே உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்